என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 122040
நீங்கள் தேடியது "அம்ரீஷ்"
வடிவுடையான் இயக்கத்தில் பரத் - சிருஷ்டி டாங்கே, நமீதா, இனியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொட்டு' படத்தின் விமர்சனம். #Pottu #PottuReview
தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள்.
அந்த கல்லூரியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.
கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பரத் பெண் வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்காக அவர் தனது உடல் மொழிகளை மாற்றி அந்த கதாபாத்திரமாக மாறியிருப்பதை உணர முடிகிறது. இனியாவின் கதாபாத்திரம் படத்தின் கருவுக்கு முக்கிய காரணமாகிறது. மந்திரவாதியாக வரும் நமீதாவுக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. சிருஷ்டி டாங்கே காதல், கவர்ச்சி என வழக்கம் போல வந்து செல்கிறார். மற்ற கதாபாத்திரங்களை சரியாக வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மருத்துவக் கல்லூரி பின்னணியில் ஹாரர் படமாக இதை இயக்கியிருக்கிறார் வடிவுடையான். படத்தில் வழக்கம்போல வித்தியாசமான புரியாத சில வசனங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால படத்தை பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
அம்ரீஷ் கணேஷின் பின்னணி இசையில் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். இனியன் ஜே.ஹாரிஸின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது.
மொத்தத்தில் `பொட்டு' நமக்கான வேட்டு. #Pottu #PottuReview #Bharath #Namitha #Iniya #SrustiDange
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை பாட வைக்க முயற்சி செய்வதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். #Sunny #SunnyLeone #Veeramadevi
மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார்.
தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறும்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்சை பாடகராக்கினேன். கா படத்தில் ஆண்ட்ரியாவை ஒரு பாடல் பாட வைத்துள்ளேன். கர்ஜனை, பரமபத விளையாட்டு என திரிஷா நடிக்கும் 2 படங்களுக்கு இசையமைக்கிறேன். திரிஷாவை பாட வைக்க முயற்சி செய்தேன். அவரோ அதற்கான நம்பிக்கை இன்னும் தனக்கு வரவில்லை என்றார்.
சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் வீரமாதேவி படத்தில் அவரை பாட வைக்க திட்டமிட்டுள்ளேன். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் விருப்பம் இல்லை. இசையில் மட்டும்தான் எனது முழு கவனமும்’. இவ்வாறு அவர் கூறினார்.
இசையமைப்பாளர் அம்ரீஷ், எனக்கான இடத்தை அந்த இரண்டு பேர் மூலம்தான் கிடைத்திருக்கிறது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். #Amrish
அம்ரீஷ் இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் சமீபத்தில் வெளியானது. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது. யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.
இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
டி.சிவா பேசும் போது...
இந்த பாடல் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம்.
இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசியதாவது...
அம்ரீஷ் நல்ல இசைஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும் என்றார்.
இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது..,.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் ஷக்திசிதம்பரம், பிரபுதேவா ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பிரபு தேவா எவ்வளவோ டியூனுக்கு விதவிதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.
எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா மூலம் சார்லி சாப்ளின் 2 எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்.
சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி என்றார். இந்த நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜன் கலந்து கொண்டார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X