search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகேஸ்வரராவ்"

    அதிகாரியை பணியிட மாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. #CBI #NageswaraRao
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் மற்றும் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் முன்அனுமதி பெறாமல் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த நிலையில் வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.சர்மா, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது. அப்போது, சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகள், ஏ.கே.சர்மாவை பணியிடமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, நாகேஸ்வரராவ் உள்ளிட்ட 2 அதிகாரிகளுக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் பிப்ரவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாகேஸ்வர ராவ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். மேலும் சிபிஐ அதிகாரியை மாற்றியதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக இரண்டு அதிகாரிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #CBI #NageswaraRao

    சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியதை அடுத்து இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க உள்ளது. #CBI #RanjanGogoi #SC
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.

    புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

    நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கை வருகிற 24-ந்தேதி வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். #CBI #RanjanGogoi #SC
    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIDirector #NageswaraRao

    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனுவை அவசரமாக வருகிற வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நிராகரித்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் என்.எல். ராவ், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அடுத்த வாரம் விசாரணை செய்கிறது.  #CBIDirector #NageswaraRao

    ×