என் மலர்
நீங்கள் தேடியது "உலக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி"
உலக புற்றுநோய் தினத்தை யொட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்:
உலக புற்றுநோய் தினத்தையொட்டி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தொற்றா நோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண்யா புற்றுநோய் குறித்தும், வாய் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய் குறித்தும், புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்தும் பெண்களிடையே விளக்கி பேசினார்.
இதில் காது, மூக்கு, தொண்டை பிரிவு டாக்டர் அன்பரசு, டாக்டர் சூர்யபிரபா, செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.