என் மலர்
நீங்கள் தேடியது "பாண்டி முனி"
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், இயக்குனரும் தயாரிப்பாளருமே தனது எஜமானர்கள் என்று கூறினார். #PandiMuni #JackieShroff #KasthuriRaja
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெராப் தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் படங்களுக்கு பிறகு கஸ்தூரி ராஜா இயக்கும் பாண்டி முனி படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பில் அவர் அளித்த பேட்டி:-
டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான வேடமாக இருக்கும் என்று நினைத்து சம்மதித்தேன். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்.

நான் அடிக்கடி சென்னை வருவேன். 1980-ல் நடிகர்-நடிகைகளின் சந்திப்பு நடக்கும் போது எல்லாம் வருவேன். ஒவ்வொரு நடிகர்-நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள். ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள். இப்போது உள்ள நடிகைகள் பெயர் கூட எனக்கு தெரியாது. நான் அதிகம் படங்கள் பார்ப்பது கிடையாது. என்னை பொருத்தவரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் என் எஜமானர்கள். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை, சாப்பாடு கொடுக்கிற அவர்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்’.
இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார். #PandiMuni #JackieShroff #KasthuriRaja