என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 131244
நீங்கள் தேடியது "இசட்.டி.இ."
சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. #Huawei
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், அமெரிக்க அதிகாரிகள் சுமத்திய அனைத்து குற்றசாட்டுகளையும் மறுத்ததோடு எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.
ஹூவாய் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது 23 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நிதித்துறை எழுப்பியது. அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்ற சம்பவங்களில் ஹூவாய் நிறுவன மூத்த நிதி அலுவலர் மெங் வான்சௌக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
ஹூவாய் நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திருடியதாகவும், வங்கி ஊழல், விதிமுறை மீறல் மற்றும் அமெரிக்க அரசிடம் போலி அறிக்கைகளை வழங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு ஹூவாய் நிறுவனம், டுவிட்டரில் பதில் அளித்துள்ளது. அதில், "ஹூவாய் நிறுவனமோ மற்றும் அதன் துணை நிறுவனங்களோ அமெரிக்க அரசு சுட்டிக்காட்டியிருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் ஹூவாய் மூத்த நிதி அலுவலர் மெங் எவ்வித தவறும் செய்யவில்லை. அமெரிக்க நீதிமன்றங்களும் இதேபோன்ற முடிவை எட்டும் என நம்புகிறோம்," என தெரிவித்துள்ளது. #Huawei
இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE
இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.
சீனா யுனிகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் சோதனை செய்து வருகிறது.
சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. #nubia #gaming
இசட்.டி.இ. நிறுவனத்தின் துணை பிரான்டான நுபியா விரைவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
சமீபத்தில் சியோமி மற்றும் ரேசர்போன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது. நுபியா நிறுவனத்தின் முதல் கேமிங் போன் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில் ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் சில முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சீன சமூக வலைதளமான வெய்போவில் நுபியா ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
புகைப்படம் நன்றி: வெய்போ
புதிய டீசரின் படி ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. முந்தைய ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் புதிய ரெட் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 4டி கேமிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் லிக்விட் மற்றும் ஏர்-கூலிங் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது. நுபியாவின் முந்தைய கேமிங் போனில் ஏர்-கூலிங் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. டீசரில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இடம்பெறாத நிலையில், நுபியா பொது மேளாலர் வெய்போ பதிவில் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் அக்டோபர் 31ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பட்டிருந்தார்.
நுபியா ரெட் மேஜிக் 2 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் LTPS TFT டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- 10 ஜி.பி. ரேம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
இசட்.டி.இ. நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் டீஸ் செய்துள்ளது. #smartphone
இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகை ஆகும். புதிய சாதனம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED தொடுதிரை, முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான எல்இடி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.
அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
புதிய அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X