என் மலர்
நீங்கள் தேடியது "இடைநீக்கம் ரத்து"
- 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்ததுடன், அவருக்கு எதிராக போராட்டமும் வலுத்ததால் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.
புதிய தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வானார். இதனால் சர்ச்சை தொடர்ந்தது. அத்துடன் புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிந்த சில நாட்களில் 15 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரிஜ் பூஷனின் சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடத்தப்படும் என்று புதிய நிர்வாகிகள் அறிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட 3 நாளிலேயே இந்திய மல்யுத்த சம்மேளனத்தை, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க பூபிந்தர் சிங் பாஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.
இந்த நிலையில் 15 மாதத்துக்கு பிறகு இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்கத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது. இதனால் மல்யுத்த சம்மேளனம், தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கான அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது. விளையாட்டு மற்றும் வீரர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம், புதிய நிர்வாகிகள் இடையே அதிகார சமநிலை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறது.
'மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் தடையை நீக்கியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவு கடந்த ஆண்டு மே 15-ந் தேதி வெளியானது. அதில் சஞ்சிதா சானு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான ஊக்க மருந்து புகாரை சஞ்சிதா சானு திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். மே மாதம் இறுதியில் சஞ்சிதா சானுவின் ஊக்க மருந்து சோதனையில் (மாதிரியில் மாற்றம்) தவறு நடந்து விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான தற்காலிக இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 25 வயதான சஞ்சிதா சானு கூறுகையில், ‘எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச பளுதூக்குதல் சம்மேளன விசாரணை கமிட்டியிடம் இருந்து சாதகமான முடிவு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டேன். இந்த சோகத்தால் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதுடன், எனது ரெயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விடலாமா? என்று கூட நினைத்தேன். என்னால் சரியாக சாப்பிட முடியாமல் போனதுடன், தூக்கத்தையும் தொலைத்தேன். எனது வாழ்க்கை அர்த்தமற்றதானது. மீண்டும் களம் திரும்பி நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த ஆண்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும், 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவும் விரும்புகிறேன்’ என்றார். #SanjitaChanu #Weightlifter