என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதா சிங்"

    மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். #SudhaSingh #NitendraSingh
    மும்பை:

    மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியா வீராங்கனை ஒர்க்னேஷ் அலெமு 2 மணி 25 நிமிடம் 45 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதலிடத்தை பிடித்தார். அவருக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய முன்னணி வீராங்கனை சுதா சிங் 2 மணி 34 நிமிடம் 56 வினாடிகளில் இலக்கை அடைந்து ஒட்டுமொத்தத்தில் 8-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பெற்றார். தனிப்பட்ட முறையில் இது அவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் டோகாவில் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சுதாசிங் தகுதி பெற்று இருக்கிறார்.

    ஆண்கள் பிரிவில் கென்யா வீரர் காஸ்மாஸ் லாகட் முதலிடம் (2 மணி 9 நிமிடம் 15 வினாடி) பிடித்தார். இந்திய அளவில் முதலாவதாக வந்த நிதேந்திர சிங் ரவாத் (2 மணி 15 நிமிடம் 52 வினாடி) உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். #SudhaSingh #NitendraSingh
    ஆசிய விளையாட்டு போட்டி ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றன. பெண்களுக்கான இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங், சின்டா, உள்பட 14 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் இந்திய வீராங்கனை சுதா சிங் 9 நிமிடம் 40.03 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த வெள்ளிப் பதக்கம் வென்றார். பஹ்ரைன் வீராங்கனை வின்ஃப்ரெட் யவி 9 நிமிடம் 36.52 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். வியட்நாம் வீராங்கனை தி ஒயான் 9 நிமிடம் 43.83 வினாடிகளில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

    மற்றொரு இந்திய வீராங்னை சின்ட்டி 10 நிமிடம் 26.21 வினாடிகளில் கடந்த 11-வது இடத்தை பிடித்தார்.
    ×