என் மலர்
நீங்கள் தேடியது "ஃவோக்ஸ்வேகன்"
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீது பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையை விரைந்து செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Volkswagen
ஃவோக்ஸ்வேகன் டீசல் வாகனங்களில் வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசு வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் உத்தரவிட்டது.
அதன்படி “நவம்பர் மாத உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை? அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார்.