என் மலர்
நீங்கள் தேடியது "ஒற்றை தலைவலி"
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ஆனந்து. சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி செவ்வந்தி (வயது 24) இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இதற்கிடையே செவ்வந்தி ஒற்றை தலைவலியால் அவதி அடைந்து வந்தார். மருந்து- மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று செவ்வந்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்று விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த செவ்வந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை செவ்வந்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.