search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீபன்ஸ்"

    பெண்களுக்கான 2-வது சுற்றில் கிகி பெர்ட்டென்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில் வொஸ்னியாக்கி, ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் பேபோசை (பல்கேரியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல 15-ம் நிலை வீராங்கனை பேர்ட்டியும் (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் வெற்றி பெற்றார்.


    ஸ்டீபன்ஸ்

    9-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் பவுலியுசென்கோவாவை எதிர்கொண்டார். அதில் கிகி பெர்ட்டன்ஸ் 6-3, 3-6, 3-6 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். அதேபோல் 20-ம் நிலை வீராங்கனையான கோன்டாவெயிட் 3-6, 3-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.


    வோஸ்னியாக்கி

    3-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். கார்சியா, சக்கரி ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7-5, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். 
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல்நாளில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தோல்வியை சந்தித்தனர். #wimbeldon 2018
    கிராண்ட் ஸ்லாம் டென்ஸ் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியனும், இந்தப் போட்டியின் முதல் வரிசை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரோனிக் (கனடா), சிலிச் (குரோஷியா), இஸ்னர் (அமெரிக்கா), ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) போன்ற முன்னணி வீரர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா) தொடக்க சுற்றிலேயே வெளியேறினார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வீரரான வாவ்ரிங்கா 1-6, 7-6, (7-3), 7-6, (7-5), 6-4 என்ற கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த வாவ்ரிங்கா, டென்னிஸ் களத்திற்கு திரும்பியதும் 6-ம் நிலை வீரரை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதேபோல் 23-ம் நிலை வீரரான கேஸ்கட்டும் (பிரான்ஸ்) தோற்றார்.


    ஸ்டீபன்ஸ்

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் (அமெரிக்கா) வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற கணக்கில் அரண்ட்சா ருஸ்சையும் (நெதர்லாந்து) வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (3-7), 6-2, 6-1 என்ற கணக்கில் ஜோகன்னா லார்சரையும் (சுவீடன்) வீழ்த்தினார்கள். மற்ற ஆட்டங்களில் வோஸ்னியாக்கி (டென்மார்க்), ரட்வன்ஸ்கா (போலந்து), மேடிசன் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    5-வது வரிசையில் இருக்கும் சுவிட்டோலினா (உக்ரைன்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியை சேர்ந்த மரியாவிடம் அவர் 6-7(3-7), 6-4, 1-6 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார். இதேபோல தரவரிசை 4-வது இடத்தில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதுகிறார்கள். #FrenchOpen2018 #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.



    ஸ்டீபன்ஸ் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    களிமண் தரையில் விளையாடுவதில் ‘கிங்’காக திகழும் நடால் இறுதிப்போட்டியில் 7-ம் நிலை வீரரான டொமினிக் தியம்பை (ஆஸ்திரியா) சந்திக்கிறார். அவர் அரை இறுதியில் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற கணக்கில் இத்தாலி வீரர் மார்கோவை வீழ்த்தினார். #FrenchOpen2018 #SimonaHalep
    ×