என் மலர்
நீங்கள் தேடியது "சபரிமலை விவகாரம்"
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் எதிர் கட்சியான காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியும் 3-வது அணியாக களம் கண்டது.
தேர்தலுக்கு பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே அதிக பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், ஆளும் கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொண்டு விட்டு நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். கருத்து கணிப்புகள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த பினராயி விஜயன் கூறியதாவது:-
தேர்தலில் கருத்துக் கணிப்புகள் எல்லாம் வெற்றி பெறும் என்று கூற முடியாது. பலமுறை கருத்துக்கணிப்புகள் தோல்வி அடைந்துள்ளது. 2004-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. எனவே தேர்தல் முடிவுகள் பற்றி இப்போதும் யூகமாக எதையும் கூற முடியாது. 23-ந் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கேரளாவை பொறுத்தவரை நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. சபரிமலை கோவில் விவகாரம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலும் பாதிக்காது. சபரிமலையில் நடக்கக்கூடாதது நடந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சபரிமலை ஆச்சாரங்களை பாதுகாப்பதற்காக அவர்கள் போராடவில்லை. சபரிமலை போராட்டங்களின் பின்னணியில் வேறு லட்சியங்கள் இருந்தன என்று ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்த பெண் கூறி உள்ளார். சபரிமலை கோவிலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தான் கேரள அரசு செய்து வருகிறது.
சபரிமலையில் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகளும், மாநில அரசு சார்பில் நடந்து வருகிறது. அடுத்த சீசனுக்குள் சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை விவகாரம் பற்றி கருத்து கூறும்போது சபரிமலை பிரச்சினையில் மக்களை சிலர் திசைதிருப்பி விட்டார்கள். இது பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.
இவரது கருத்து முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு நேர்மாறாக இருப்பதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதால் கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்த பிரச்சினை கேரளாவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலின் போது சபரிமலை பிரச்சினை பற்றி பிரசாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரிகள் டிகா ராம் மீனா எச்சரித்து இருந்தார்.
ஆனால் இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் இதுதொடர்பாக கூறியதாவது:-
சபரிமலை பிரச்சினை தொடர்பாக மாநில அரசு எடுத்த நிலைப்பாடு பற்றி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் 100 சதவீதம் விவாதிக்கப்படும். இதில் யாரும் தலையிட முடியாது. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும்.
சபரிமலையில் இளம் பெண்கள் தரிசனம் செய்ய உதவிய ஆளும் கம்யூனிஸ்டு அரசின் மக்கள் விரோத செயலை எடுத்துக்கூறி பாரதீய ஜனதா பிரசாரம் செய்யும். நாங்கள் அப்படி பிரசாரம் செய்வதை தடுக்க தேர்தல்கமிஷனுக்கு அதி காரம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். #BJP

கேரளாவில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கொல்லம் நகரில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு காரணங்களுக்காக பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த போக்கு மாற வேண்டும் என பா.ஜனதா விரும்பியது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெறும் 56 சதவீத பின்தங்கியப் பகுதிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி இருந்தது. ஆனால் தற்போது அதனை 90 சதவீதமாக அதிகரித்துள்ளோம். இது விரைவில் 100 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் என்பதை யாராவது அறிவார்களா? தற்போது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. அதற்கான தரவரிசையில் 142-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்திய கலாச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மதிக்க மாட்டார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இந்தளவு மிகவும் மோசமாக இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சபரிமலை விவகாரத்தில் கேரள இடதுசாரி அரசின் போக்கு வரலாற்றில் மிகவும் மோசமானதாக இடம்பெறப்போகிறது. இவர்களைப் போன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் மோசமானதுதான்.
முத்தலாக் விவகாரத்திலும் காங்கிரசும், இடதுசாரியும் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றுச் சிறப்புமிக்க, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதன்மூலம் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இந்த திட்டத்தில் பலனடைய முடியும்.
இடதுசாரியும், காங்கிரசும் பெயரளவில் தான் வெவ்வேறு, ஆனால் கேரள இளைஞர் சக்தியை வீணடிப்பதில் ஒரே மாதிரியானது தான். மேலும் அவர்கள் ஏழைகளையும் புறக்கணித்து வருகின்றனர். கேரள மக்களை ஏமாற்றுவதிலும் அவர்கள் இருவரும் ஒன்றுதான். ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பகுதிகள். பெயரளவில் வேறுபட்டிருந்தாலும் ஊழல், சாதி மற்றும் மதப் பிரிவினைகளில், அரசியல் வன்முறைகளில் ஒன்றுதான்” என்று கூறினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.
இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.
பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.
இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.
ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர். #BJP #Sabarimala #RamnathKovind

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதா கட்சி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரள அரசு தலைமை செயலகம் முன்பு அந்த கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 4 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளனர். தாங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளான கிருஷ்ணகுமார், ஜெயக்குமார், சுரேந்திரன், சுகுமாரன் ஆகியோர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை பிரச்சினை மூலம் பா.ஜனதா கட்சி கேரள மக்களிடம் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறது. இதன் மூலம் அரசியல் லாபம் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக மாநில கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நிறைவேற்றும் எந்திரமாக பா.ஜனதா கட்சி செயல்படுவது கண்டனத்துக்குரியது.
விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முற்போக்கு சிந்தனை உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற கட்சியில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #Sabarimala #BJP #CPIM

கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
