search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலோ"

    சோலோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சோலோ இரா 5X என அழைக்கப்படுகிறது. #smartphone



    சோலோ நிறுவனம் இரா 5X என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக சோலோ நிறுவனம் தனது இரா 4X ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய இரா 5X ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. ஸ்டூடியோ மோட் மற்றும் ஸ்டூடியோ லைட்டிங் மோட் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.

    இத்துடன் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஏ22, 12 என்.எம். குவால்கோர் சிப்செட் மற்றும் டூயல் பிளேட் கிராஃபைட் லேயர் ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைக்க வழங்கப்பட்டுள்ளது.

    ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட இரா 5X ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ வசதி கொண்ட இரா 5X ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சோலோ இரா 5X சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். GE GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஸ்டார் ஓ.எஸ். 5.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சோலோ இரா 5X ஸ்மார்ட்போனின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விற்பனை மற்றும் விலை பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என சோலோ தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Xolo #smartphone



    இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சோலோ இரா 4எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, இரு கேமரா சென்சார்களுக்கும் எல்.இ.டி. ஃபிளாஷ், டூயல் 4ஜி வோல்ட்இ, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    புதிய சோலோ ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சோலோ இரா 4எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.4,444 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோலோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மெமரி மற்றும் ரேம் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
    ×