search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரைஇறுதி"

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெயஸ் இணையை வீழ்த்தி போபண்ணா ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. #MaharashtraOpen #RohanBopanna
    புனே:

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜாமி முனாரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 7-5, 6-2 என்ற நேர் செட்டில் மாலெக் ஜாஸிரியை (துனிசியா) விரட்டியடித்தார். குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் தன்னை எதிர்த்த எர்னஸ்ட்ஸ் குல்பிசை (லாத்வியா) 7-6 (5), 7-6 (5) என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 7-6 (6) 6-7 (5), 3-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஜாஸிரியிடம் வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    அதே சமயம் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா -திவிஜ் சரண் ஜோடி 6-7 (4-7), 6-4, 17-15 என்ற செட் கணக்கில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் (மெக்சியா) இணையை வெளியேற்றி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 6 முறை ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த போபண்ணா கூட்டணி இந்த வெற்றியை பெற 1 மணி 45 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. ‘இது போன்ற மிகவும் நெருக்கமான போட்டியை ஒரு போதும் விளையாடியதில்லை’ என்று வெற்றிக்கு பிறகு போபண்ணா கூறினார்.
    மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணியும் மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றனர். #WomensT20WorldCup
    கயானா:

    6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. இன்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் அரை இறுதிக்கு நுழைந்தன. தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் (‘ஏ’ பிரிவு), நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்தது.

    மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 30 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    ஹர்மன்பிரித் கவூர் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்- 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் 22-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது. #WomensT20WorldCup
    ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #ATPFinal #RogerFederer #AlexanderZverev
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச்(செர்பியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

    நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்தித்தார். 1 மணி 35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ஆசிய விளையாட்டு போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டுட்டிசந்த்- ஹிமாதாஸ் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்யெங் நகரங்களில் நடந்து வருகிறது.

    10-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் டூட்டி சந்த், ஹிமா தாஸ் பங்கேற்றனர்.

    இதில் 4-வது தகுதி சுற்றில் ஓடிய டூட்டி சந்த் 23.37 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    2-வது தகுதி சுற்றில் ஓடிய ஹிமாதாஸ் 23.47 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் நேரத்தின் அடிப்படை யில் 7-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இதன் அரைஇறுதி போட்டி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. ஹமாதாஸ் 400 மீட்டர் ஓட்டத்திலும், டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தடகளத்தில் இன்று மாலை நடக்கும் பெண்களுக்கான 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா பங்கேற்கிறார். பெண் களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் அன்னுராணியும் கலந்து கொள்கிறார்.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது, ஆரோக்ய ராஜீவ், ஹிமாதாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி இன்று ‘லீக்’ போட்டியில் தாய்லாந்துடன் மோதியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், குருவில்லா, தன்விகன்னா ஆகிய கொண்ட இந்திய அணி 3-0 என்ற தளத்தில் வெற்றி பெற்றது. #AsianGames2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

    1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 3-வது முறையாக உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி 2006-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்று இருந்தது.

    பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தாகத்துடன் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடம் பெற்றதே அந்த அணியின் சிறந்த நிலையாக உள்ளது.

    பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் அரைஇறுதிக்குள் தடம் பதித்து இருக்கின்றன. பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை (4-3) வெளி யேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே (2-0) அணியை வீழ்த்தியது.

    பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீட்டுக்கு அனுப்பியது. கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான பிரேசிலை சாய்த்தது. பெல்ஜியம் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.

    பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட் (2 கோல்), கெவின் டி புருனே, நாசெர் சாட்லி, மரோன் பெல்லாய்னி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தடுப்பு அரணாக செயல்படுவதில் வல்லவர். அவரது சிறப்பான செயல்பாடு தான் கால்இறுதியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

    பிரான்ஸ் அணியில் கைலியன் பாப்பே (3 கோல்), அன்டோன் கிரிஸ்மான் (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். இரு அணிகளின் தாக்குதல் ஆட்டமும், தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போவது யார்? என்பதை கணிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த அணி முதலில் கோல் அடிக்கிறதோ? அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் அய்யமில்லை.

    இன்றைய போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ரபெல் வரானே கருத்து தெரிவிக்கையில், ‘பெல்ஜியம் அணி இளம் வீரர்களை அதிகம் கொண்டது. இருப்பினும் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். தரமான வீரரான ரோம்லு லுகாகு உடல் ரீதியாக எந்தவொரு அணியின் தடுப்பு ஆட்டத்துக்கும் பிரச்சினை அளிப்பார். அவரது இந்த முயற்சிக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எடன் ஹசார்ட் பந்தை நன்றாக கடத்தி செல்லக்கூடியவர். அவருக்கு நாங்கள் இடம் அளிக்காத வகையில் விளையாடுவோம். அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

    பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் கெவின் டி புருனே அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டத்துக்குள் வந்த பிறகு ஒருபோதும் சாதாரண எதிரணியை எதிர்பார்க்க முடியாது. பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக மல்லுக்கட்டுவோம். அந்த அணிக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். முடிவில் களத்தில் யார் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அது தான் கால்பந்து ஆட்டம்’ என்று தெரிவித்தார். #FIFA2018 #WorldCup2018 #france #belgium
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen2018 #DominicThiem
    பாரீஸ்:

    பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

    ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

    பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.  #FrenchOpen2018 #DominicThiem  #tamilnews 
    ×