என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடங்கமறு"

    அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KarthickThangavel #PrincePictures
    கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான அடங்கமறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ஜெயம் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் தொல்லையை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது.

    முன்னதாக சென்னையில் நேற்று அடங்கமறு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியானது. கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவ் படத்தை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இந்த இரு படங்களில் ஒரு படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படம் தவிர்ந்து பி.எஸ்.மித்ரன் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarthickThangavel #PrincePictures #PSMithran

    ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் கார்த்திக் தங்கவேலின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் தமிழ்நாடு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Adangamaru
    ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் வி.சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருப்பது, படத்தை கொண்டாட மேலும் ஒரு வலுவான காரணமாக அமைந்துள்ளது.

    சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் 'அடங்க மறு' படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. 

    இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 



    சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
    ×