search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான்கிராப்ட்"

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டி தொடங்கும் நேரத்தில் பால் டேம்பரிங் குறித்த ஸ்மித், பான்கிராப்ட் பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ரிக்கி பாண்டிங் அதிர்ச்சியடைந்துள்ளார்.
    பாம் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதமும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தடை விதித்தது.

    மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

    இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

    பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்’’ என்றார்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #CA #Smith #Warner
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு மார்ச் 29-ந்தேதி வரை சுமித், வார்னர் மீதான தடை இருக்கிறது. பான்கிராப்ட் மீதான தடை டிசம்பர் 29-ந்தேதியுடன் முடிகிறது.

    இந்த தடை கடுமையானது. அதை நீக்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆஸ்திரேலிய அணி சமீப காலமாக தோல்வியை தழுவி வருகிறது. இதனால் ஸ்மித், வார்னர் மீதான தடை இந்திய தொடரில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    இந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர். பான்கிராப்ட் ஆகியோர் மீதான தடை நீக்கம் செய்யப்படமாட்டாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. தடை அதே நிலையில் இருக்கும் என்று கூறி வீரர்கள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
    ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் தேசிய அணிக்கு திரும்புவதற்கு பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். #Smith
    ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். ஸ்மித், வார்னருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓராண்டும், பான் கிராப்ட்டிற்கு 9 மாதமும் தடை விதித்துள்ளது.

    இந்த தடை முடிந்த பின்னர் மூன்று பேரும் எளிதாக மீண்டும் அணிக்கு திரும்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே வருகிறது.

    வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியின் முதுகெலும்பாக திகழ்வதால் அணிக்கு திரும்ப வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.



    இந்நிலையில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் தடைக்காலம் முடிந்து மீண்டும் தேசிய அணிக்கு ஏன் திரும்ப முடியாது என்பதற்கான எந்த காரணமும் இல்லை ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

    இதனால் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் ஸ்மித் மற்றும் வார்னர் பங்கேற்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, கேப் டவுனில் நடைபெற்று 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள். இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

    தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பின் சமீபத்தில் சொந்த நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்து வருகிறன்றனர். ஆஸ்திரேலியா கிரக்கெட் வாரியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஸ்மித், வார்னரால் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட முடியும் என்று கூறி வருகிறார்கள்.



    இதற்கிடையே கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது. இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட் கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

    ×