search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம்.டபுள்யூ"

    பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. #BMW



    தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது.

    இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.


    பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது.

    கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-

    போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.  #BMW
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X4 எஸ்.யு.வி. கூப் மாடல் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படுகிறது. #BMW



    இந்தியாவில் முதல் முறையாக பி.எம்.டபுள்யூ. X4 எஸ்.யு.வி. கூப் மாடல் சென்னையில் சோதனை செய்யப்படுகிறது. புது பி.எம்.டபுள்யூ. X4 இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் அதிக பிரபலமாகி வரும் எஸ்.யு.வி. கூப் மாடல்களில் பி.எம்.டபுள்யூ. புது மாடலாக X4 அமைவதால், புது காருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. புதிய X4 எஸ்.யு.வி. பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் X3 மற்றும் X5 மாடல்களுக்கு மத்தியில் அறிமுகமாக இருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Drivespark

    அன்றாட பயன்பாடுகளுடன் வார இறுதிக்கு ஏற்ற ஸ்போர்ட் திறன்களுடன் புது பி.எம்.டபுள்யூ. X4 உருவாகி இருக்கிறது. சமீபத்தில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்2 காம்படிஷன் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையின் சுற்று வட்டாரங்களில் பி.எம்.டபுள்யூ. X4 சோதனை செய்யப்படுவதாக தெரிகிறது.

    சோதனையின் போது கார் மறைக்கப்படாததை பார்க்கும் போது பி.எம்.டபுள்யூ. X4 M30i வேரியன்ட் தெளிவாக தெரிகிறது. புது பி.எம்.டபுள்யூ. X4 முந்தைய X6 போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. கூப் போன்ற ஸ்லோப்பிங் ரூஃப் கொண்டிருக்கும் நிலையில், புது கார் எஸ்.யு.வி. ரகமாகவே இருக்கிறது.



    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. X6 ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்த கார் X6 M வெர்ஷன் மட்டுமே கிடைக்கிறது. புகைப்படத்தில் தெரியும் பி.எம்.டபுள்யூ. X4 வடிவைப்பு அம்சங்கள் சர்வதேச மாடலை விட வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

    பி.எம்.டபுள்யூ. X4 M30i வேரியன்ட்டில் 2.0-லிட்டர் ட்வின் பவர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #BMW
    ×