search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரதயாத்திரை"

    மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தவுள்ள ரதயாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Rathyatra #BJP #KolkattaHighCourt
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் அனைத்து பாராளுமன்றத் தொகுதிகளிலும் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரைக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்க உள்ளார். ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
     
    இதையடுத்து ரதயாத்திரை நடத்த அனுமதி கோரி மாநில பாஜக சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மத ரீதியிலான மோதல்கள் ஏற்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தார். இதையடுத்து பாஜக சார்பில் ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 



    மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், ரத யாத்திரைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்தார்.

    இதுதொடர்பாக, நீதிபதி தபப்ரதா சக்கரவர்த்தி கூறுகையில், ‘12 மணி நேரம் மட்டுமே பேரணி நடத்த வேண்டும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் ரதயாத்திரையை நடத்த வேண்டும். யாத்திரையால் பாதிப்பு வந்தால் அதற்கான முழு பொறுப்பும் பாஜகவை சேரும்’ என்றார்.

    கொல்கத்தா நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாநில பாஜகவினர் வரவேற்றுள்ளனர். #Rathyatra #BJP #KolkattaHighCourt
    கேரளாவில் பாஜக சார்பில் 6 நாள் நடைபெற உள்ள சபரிமலை பாதுகாப்பு ரதயாத்திரையை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தொடங்கி வைத்தார். #SabarimalaRathYatra #SabarimalaProtests
    காசர்கோடு:

    கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கேரள பாஜக சார்பில் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை இன்று தொடங்கியது. காசர்கோடு மாவட்டம் மாத்தூர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து இந்த யாத்திரையை கர்நாடக மாநில பாஜக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.



    இந்நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியபோது, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் துஷார்  வேலப்பள்ளி ஆகியோர் தலைமையில் நடைபெறும் சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரையானது, சபரிமலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இடது சாரி அரசாங்கத்தின் கண்களை திறக்கச் செய்யும் என்றார். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு பினராயி விஜயன் அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  

    ரத யாத்திரை துவக்க விழாவில் மங்களூர் எம்பி நளின் காட்டீல், பாஜக தேசிய இணை ஒருங்கிணைப்பு செயலாளர் சந்தோஷ்  மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ரத யாத்திரை, வரும் 13ம்தேதி சபரிமலையை சென்றடைய உள்ளது. #SabarimalaRathYatra #SabarimalaProtests
    ×