என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரவீன் கே.எல்"

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தின் கதையை கேட்டு தலையே சுற்றிவிட்டதாக எடிட்டர் பிரவீன் கே.எல் தெரிவித்துள்ளார். #Maanadu #STR
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

    சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியுள்ளார்.

    கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார். அதில் ரூபன் கூறியிருப்பதாவது,


    உறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம் மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரவீன் கே.எல் கவனிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    படத்தில் சிம்பு வில்லன் போன்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Maanadu #STR #VenkatPrabhu #VP9

    ×