என் மலர்
நீங்கள் தேடியது "எல்.வி.முத்துகணேஷ்"
தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம். #ThuppakkiMunai #VikramPrabhu
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் `துப்பாக்கி முனை’.
விக்ரம் பிரபு நாயகனாகவும், ஹன்சிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - எல்.வி.முத்துகணேஷ், ஒளிப்பதிவு - ராசாமாதி, கலை - மாயபாண்டி, படத்தொகுப்பு - புவன் ஸ்ரீனிவாஸ், பாடல்கள் - புலவர் புதுமைப்பித்தன், பா. விஜய், சண்டைபயிற்சி - அன்பறிவ், தயாரிப்பாளர் - கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பு - வி கிரியேஷான்ஸ், இயக்கம் - தினேஷ் செல்வராஜ்.

படம் பற்றி இயக்குநர் கூறும் போது,
படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
படம் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu #Hansika