என் மலர்
நீங்கள் தேடியது "கேத்தரீன் தெரசா"
2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven
நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் ரெட் கார்டு போடப்போவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கு சிம்பு பாடல் மூலம் பதிலளித்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார்.
இந்த புகார் அடிப்படையில் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாக செய்திகள் வெளியாயின.
நடிகர் சங்க தேர்தலின் போதே விஷாலுக்கு எதிராக குரல் கொடுத்தவர் சிம்பு. எனவே விஷால் சிம்புவை பழி வாங்குகிறார் என்று சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள்.
தற்போது மீண்டும் கைவசம் நிறைய படங்களோடு வலம் வருகிறார் சிம்பு. சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் உருவாகிறது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படம் தான் தமிழில் இந்த பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன.
இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது. இந்த வரிகள் விஷாலை வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. #STR #Simbu #VanthaRajavathaanVaruven
சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் டீசரை ரஜினிகாந்தின் 2.0 படத்துடன் இணைக்க லைகா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
`செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி. இயக்கும் இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத் ராகவேந்திரா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசருக்கு சிம்பு டப்பிங் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் டீசர் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது. அந்த புரோமோ வீடியோவில் படத்தின் டீசர் வருகிற 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
#VandhaRajavadhanVaruven Teaser Releasing ON.....#VRVTeaser#STR#SundarC#MASS 🔥🔥🔥 https://t.co/tkgubmP7il
— Lyca Productions (@LycaProductions) November 22, 2018
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 2.0 படம் வருகிற 29-ஆம் தேதி உலகமெங்கம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், 2.0 படத்துடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீசரை இணைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VandhaRajavadhanVaruven #VRVTeaser #STR
‘அத்தாரின்டிகி தாரேதி’ தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடித்து வரும் நிலையில், இரண்டு நாயகிகளில் மேகா ஆகாஷ் ஏற்கனவே நடித்து வரும் நிலையில், மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகி உள்ளார். #STR #CatherineTresa
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
தற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து. அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்தரீன் தெரசா இணைய உள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்தரீன், ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு 2' படத்தில் நடித்துள்ளார். இது தவிர `நீயா 2' படத்தில் ஜெய்யுடன் கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார். #STR #MeghaAkash #CatherineTresa