என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிவைத்து தகர்ப்பு"

    மகாராஷ்டிர மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. #100YearOldBridge #BridgeDemolition
    தானே:

    மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின்போது கலு நதியின் குறுக்கே இரண்டு சிறிய மலைகளை இணைந்து பாலம் கட்டப்பட்டது. ஷகாபூர்- முராத் தாலுகாக்களை இணைக்கும் இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிதிலமடைந்து, கடந்த ஆண்டு மிகவும் மோசமானது. இதனால் இந்த பாலம் அபாயகரமான பாலம் என அறிவிக்கப்பட்டு, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.



    இந்நிலையில், இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வெடிவைத்து பாலம் தகர்க்கப்பட்டது. பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் சக்திவாய்ந்த வெடிகள் பொருத்தப்பட்டு ஒரே சமயத்தில் வெடிக்கச் செய்யப்பட்டது. அதிகாலையில் பாலத்தை வெடிவைத்து தகர்த்த காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்தனர். நொடிப்பொழுதில் பாலம் இடிந்து விழும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

    அந்த பாலம் இருந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #100YearOldBridge #BridgeDemolition



    ×