search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டீவ்வாக்"

    ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கூறியுள்ளார். #AUSvIND #SteveWaugh

    சிட்னி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இந்த முறையாவது தொடரை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு முன்னாள் வீரர்களும் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் குறித்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கணித்துள்ளார். இது தொடர்பாக இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார் படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு கனிசமான வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உண்மையிலேயே மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    விராட்கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன். தெண்டுல்கர், லாராவை போன்று அவரும் மிகப் பெரிய வீரர்.


    இந்த டெஸ்ட் தொடரில் யார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை குவிக்கும். ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு சவால் விடும் வகையில் இருக்கும்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. கும்மின்ஸ், ஸ்டார்க், ஹாசல வுட் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள். அவர்கள் திறமை வாய்ந்த வேகப்பந்து வீரர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் லாசன் கூறும் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. 3 வேகப்பந்து வீரர்கள், ஒன்று அல்லது 2 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்றார். #AUSvIND #SteveWaugh

    டெண்டுல்கர், லாரா போன்று விராட் கோலியும் சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் புகழாரம் சூட்டியுள்ளனர். #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் மிகப்பெரிய வெற்றியை நேசிக்கிறார். டெண்டுல்கர், லாரா போன்றே விராட் கோலியும் சிறந்த வீரர். அபாயகரமான பேட்ஸ்மேன். சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி உள்ளார்.



    தற்போதுள்ள இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுவதை என்னால் ஏற்க இயலாது. நான் விளையாடிய இந்திய அணிகளை விட தற்போதுள்ள அணி சிறந்ததாக கருதவில்லை. வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அவ்வாறு கூறி இருக்கலாம். இது போன்ற கருத்துக்களை அவர் தவிர்த்து இருக்கலாம்.

    ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே தற்போதுள்ள இந்திய அணி நல்ல தயார் நிலையில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருக்கிறது. இதனால் இந்த தொடர் பரபரப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஸ்டீவ்வாக் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1999-ல் உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #SteveWaugh #BrianLara #SachinTendulkar #ViratKohli
    கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் விராட் கோலி முறியடித்து விடுவார் என்று கருதுவதாக ஸ்டீவ்வாக் தெரிவித்தார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசித்து விளையாடுகிறார். தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற வெறி, உத்வேகம், ஆர்வம், ஆக்ரோஷம், உடல்தகுதி எல்லாமே அவரிடம் இருக்கிறது. கடுமையான காயங்கள் ஏதும் அடையாமல் இருந்தால் அவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தவிர்த்து மற்ற அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடுவார் என்று கருதுகிறேன்.



    டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை (99.94) அவரால் எட்ட முடியாது’ என்றார். 29 வயதான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 73 டெஸ்டில் ஆடி 24 சதங்கள் உள்பட 6,331 ரன்களும் (சராசரி 54.57), 216 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38 சதங்கள் உள்பட 10,232 ரன்களும் (சராசரி 59.53) குவித்துள்ளார்.

    சூப்பர் பார்மில் உள்ள விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சேர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் 7,824 ரன்கள் குவித்து, இந்த காலக்கட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (6,371 ரன்) உள்ளார். #SteveWaugh #ViratKohli #DonBradman
    ×