என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறைமுக திட்டம்"

    இலங்கையில் துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இலங்கை மற்றும் சீனா இடையே துறைமுகத் திட்ட ஒப்பந்தம் மீண்டும் கையெழுத்தானது. #SriLankaPort

    கொழும்பு:

    இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.

    துறைமுகங்களை சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

    எனவே இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்து மைத்ரியபால சிறிசேனா வெற்றி பெற்றார். அதையடுத்து அங்கு சீனாவின் ஆதிக்கம் தடுக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் இந்தியாவுடன் நட்புறவாக இருந்தனர்.

    தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்க தொடங்கி விட்டது.

    தற்போது துறைமுகங்களை மேம்படுத்தும் திட்ட பணிகள் மீண்டும் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான 2 ஒப்பந்தங்கள் கடந்த வாரம் கையெழுத்தானது.

    இலங்கை அரசுக்கு சொந்தமான ஜெயா கண்டெய்னர் டெர்மினல் நிறுவனம் சீன துறைமுக என்ஜினீயரிங் நிறுவனத்துடன் இணைந்து ரூ.236 கோடி (32 மில்லியன் டாலர்) காண்டிராக்ட் கையெழுத்தாகியுள்ளது.

    சீனாவின் ஷாங்காய் ஷேன்குவா கனரக தொழிற்சாலை நிறுவனத்திடம் இருந்து ரூ.190 கோடிக்கு (25.7 மில்லியன் டாலர்) மதிப்பில் 3 கிரேன் எந்தி ரங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை துறைமுக கழகம் வெளியிட்டுள்ளது. #SriLankaPort

    ×