என் மலர்
நீங்கள் தேடியது "விஷ சாராயம் குடித்து பலி"
மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. #Liquor #WestBengal
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் சமீபத்தில் விஷ சாராயம் குடித்தனர். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Liquor #WestBengal