search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுஷ்மா"

    முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும் தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். #Telanganacreated #KCRfamily #Sushma
    ஐதராபாத்:

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா  4  பிரசார கூட்டங்களில் பேசிச் சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது கட்டமாக நேற்று பிரசார கூட்டங்களில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.



    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    முன்னதாக, ஐதராபாத்  விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுஷ்மா, (காபந்து) முதல் மந்திரி சந்திரசேகர ராவ் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்காக மட்டும்  தெலுங்கானா என்ற தனிமாநிலம் உருவாக்கப்படவில்லை என தெரிவித்தார்.

    ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக பா.ஜ.க. சார்பில் எங்கள் முழு ஆதரவையும் நாங்கள் தெரிவித்திருந்தோம். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக 2 ஆயிரம் இளைஞர்கள் தியாகம் செய்தனர். ஆனால், 400 பேரை மட்டுமே இந்த மாநில அரசு தியாகிகளாக அங்கீகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #Telanganacreated #KCRfamily #Sushma
    சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பள்ளியை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #SushmajiPleaseHelp #JeddahIndianSchool #SushmaSwaraj
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சர்வதேச இந்திய பள்ளி (ஐ.ஐ.எஸ்.ஜெ.) இயங்கி வருகிறது. ஐஐஎஸ்ஜெ பள்ளியின் பிரதான கட்டிடத்தில் பெண்கள் பிரிவு இயங்குகிறது. அங்கிருந்து 4 கிமீ தொலைவில் ஆண்கள் பிரிவு உள்ளது.

    இங்கு, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது, கட்டடம் குறித்த வழக்கில், சவுதி நீதிமன்றம் வரும் 9-ஆம் தேதிக்குள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 



    இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 'தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்' என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக ஆன்லைன் மூலம் 3300 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.  #SushmajiPleaseHelp #JeddahIndianSchool #SushmaSwaraj

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். #Keralafloods #SushmaSwaraj
    புதுடெல்லி:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையினால் ஏற்பட்ட, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து  ஈடுபட்டு வருகின்றனர். 

    மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் உடுத்திய ஆடைகளுடன் வாழ்வாதாரத்தை தொலைத்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.

    ‘கேரளா மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏராளமான நாசம் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலைமை சீரடைந்ததும் வெள்ளநீரில் நனைந்து சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்களை கட்டணமின்றி வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

    தேவை உடையவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் அருகாமையில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார். #Keralafloods #Passportsdamagedinflood #SushmaSwaraj
    சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை பெற அந்நாட்டு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். #IndiaSwitzerlanddiscuss
    புதுடெல்லி: 

    சுவிட்ஸர்லாந்து நாட்டிலுள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் ரகசியமாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பான தகவல்களை அளிக்க புதிய நெறிமுறைகளை ஏற்படுத்த அந்நாட்டு பாராளுமன்றக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    இந்நிலையில், அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை மந்திரி இக்னாஸியோ கேஸிஸ், டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி இதுதொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் பதுக்கியுள்ள நபர்களின் வங்கி கணக்கு எண், அவரது பெயர், முகவரி, பிறந்த தேதி, வரி அடையாள எண் (டின்) முதலீடு செய்துள்ள பணத்தின் மூலம் கிடைத்த வட்டி மற்றும் ஈவுத்தொகை, காப்பீடு திட்டத்தில் செய்யப்பட்ட முதலீடுகள், சொத்துகளை விற்றுபெற்ற மூலதனங்கள் போன்ற விபரங்கள் பரிமாறப்பட வாய்ப்புகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaSwitzerlanddiscuss #sharinginformation #informationonblackmoney
    ×