என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 149207
நீங்கள் தேடியது "தர்மசபா"
ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ‘தர்மசபா’ தொடங்கியது. #Ayodhyarally
அயோத்தி, நவ. 25-
ராமர் பிறந்த இடமான அயோத்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு ராமருக்கு கோவில் கட்டப்பட்டு இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதாக கூறி இந்து அமைப்புகள் கரசேவை நிகழ்ச்சியை நடத்தின.
இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி பாபர் மசூதியை இடித்ததுடன் அந்த இடத்தில் சிறிய வடிவிலான ராமர் கோவிலையும் கட்டினார்கள். அங்கு பெரிய அளவில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று இந்து அமைப்பினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் வழக்கு நிலுவையில் உள்ளது.
ராமர் கோவில் கட்டுவது சம்பந்தமாக உடனே கோர்ட்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று இந்து அமைப்புகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என கூறி ஜனவரி மாதத்துக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.
இதையடுத்து ராமர் கோவில் கட்டுமான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என வற்புறுத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் இன்று தர்மசபா என்ற பேரணி நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்தனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், சிவசேனா மற்றும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களாகவே நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் அயோத்தியில் குவிந்த வண்ணம் இருந்தனர். தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் திரண்டு இருக்கிறார்கள். புகழ்பெற்ற சாமியார்களான ஜெகத் குரு ராமானந்தசாரியா, சுவாமி ஹன்ஸ்தேவ சாரியா, ராம்பத்ரசாரியா, ராமேஸ் வர்தாஸ், வைஷ்ணவ், மகாந்த் நிரித்திய கோபால் தாஸ் மற்றும் ஏராளமான சாமியார்கள் பங்கேற்றுள்ளனர்.
இது தவிர, விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தர்மசபா நிகழ்ச்சி, ராமஜென்ம பூமிக்காக கட்டுமான பொருட்களை தயார் செய்யும் இடமான நயாஸ் ஒர்க்ஷாப் அருகில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள படேபக்த்மால் கிபாகியா என்ற இடத்தில் நடந்தது.
பகல் 12.30 மணியளவில் தர்ம சபா நிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைவர்களும், சியர்களும் பேசி வருகிறார்கள்.

×

X