என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைவீரர் பலி"

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படைவீரர் ஒருவர் பலியானார். #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த சிஆர்பிஎப் முகாமுக்குள் இன்று மாலை நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். தங்களிடம் இருந்த கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படைவீரர் ஒருவர் பலியானார். மேலும், இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Pulwama #MilitantsSAttack #CRPFcamp
    ×