என் மலர்
நீங்கள் தேடியது "ஆரத்யா"
இந்தி சினிமாவில் பிரபலமான அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய்யின் குழந்தையான ஆரத்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அபிஷேக், ஆரத்யாவை கொடுத்த ஐஸ்வர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai
இந்தி சினிமாவின் பிரபல தம்பதி அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த குரு திரைப் படத்தில் ஐஸ்வர் யாராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்தனர்.
அந்த படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியினர் நேற்று தங்களது மகள் ஆராத்யா பச்சனின் 7-வது பிறந்தநாளை கொண்டாடினர்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், “குழந்தையின் பிறந்தநாள் அவளின் தாயை கொண்டாடாமல் முடிவடையாது.

மகளுக்கு பிறப்பை அளித்ததற்கு, அவளின் மேல் அன்பை செலுத்துவதற்கு, அவளை பார்த்துக் கொள்வதற்கு, எல்லாவற்றுக்கும் மேலான ஆச்சரியப் பெண்ணாக இருப்பதற்கு... என்னுடைய திருமதிக்கு வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசான நம் மகளை அளித்ததற்கு நன்றி. என்னுடைய தேவதை ஆராத்யாவுக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். #AbhishekBachchan #AishwaryaRai