என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரம் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.



    இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக கஸ்னி மாகாணத்துக்கு உட்பட்ட அன்டார் மற்றும் காராபாக் மாவட்டங்களில் உள்ள  தலிபான்கள் பதுங்குமிடங்களின் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20-க்கும் அதிகமான  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes

    ×