என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் பலி"
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..
மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
சோபியான்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள இமாம் சாஹிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையிலான சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#ShopianEncounter
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter
பத்காம்:

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதிகளிலும், பொது இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட்டும் வீரமரணம் அடைந்தார். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார் என இன்று மாலை முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்றிரவு நிலவரப்படி புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், ராணுவ உயரதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையில், பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் மறைவுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் பலியாகினர். #Somalia #USAirStirkes
மொகடிஷு:
சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்த்த 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Somalia #USAirstrikes
மொகடிஷூ:
சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் வான்தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷூவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பெலத் அமின் சவுத் பகுதியில் அல் ஷபாப் பதுங்கியிருந்த இடங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சமீபத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை விமான தாக்குதல்களை நடத்தியது. விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மொகடிஷூ மீது தாக்குதல் நடத்துவதற்காக பெலத் அமின் சவுத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சோமாலியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய படைகளுடன் அமெரிக்க படைகளும் இணைந்து கடந்த சில மாதங்களாக பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக தரைவழி தாக்குதல்கள் மற்றும் வான்தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. #Somalia #USAirstrikes

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து சிதறியதில் 35 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #AfghanistanTaliban #Talibankilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டியுள்ள கந்தஹார் மாகாணம், மருஃப் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரில் தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதில் 35-க்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், இந்த தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர். #AfghanistanTaliban #Talibankilled

ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் பதுங்குமிடங்களின் மீது கடந்த 24 மணி நேரம் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes
காபுல்:

இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக கஸ்னி மாகாணத்துக்கு உட்பட்ட அன்டார் மற்றும் காராபாக் மாவட்டங்களில் உள்ள தலிபான்கள் பதுங்குமிடங்களின் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக கஸ்னி மாகாணத்துக்கு உட்பட்ட அன்டார் மற்றும் காராபாக் மாவட்டங்களில் உள்ள தலிபான்கள் பதுங்குமிடங்களின் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 20-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.#SomaliaMilitants
மொகடிஷு:
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.
உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த பயங்கரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு அருகேயுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நேற்று சோமாலியா அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகனில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. #SomaliaMilitants
காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் ராணுவவீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantKilled
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் என்கிற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர். அவர்களை தங்களிடம் சரணடைந்துவிடும் படி போலீசார் எச்சரித்தனர். மாறாக பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 3 ராணுவ வீரர்களின் உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை சக வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து ராணுவவீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதே போல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்தபோது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. அப்போது ராணுவ வீரர்கள் சுட்டதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிர் இழந்தனர்.
மற்றொரு சம்பவமாக தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவவீரர்கள் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார்.
இதனையடுத்து, தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. #JKEncounter #MilitantKilled