என் மலர்
நீங்கள் தேடியது "ரஜினி நட்ராஜ்"
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் சட்டப்பூர்வமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #VishnuVishal #Divorce
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர். இப்போது அவர்களுக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) November 13, 2018
“நானும், ரஜினியும் ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கிறோம். இப்போது எங்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருப்பது எங்களின் முக்கிய கடமையாகும். அவனுக்கு நல்லதை செய்வோம். நாங்கள் சில சந்தோஷமான ஆண்டுகளை ஒன்றாக கழித்து இருக்கிறோம். இனிமேலும் நல்ல நண்பர்களாக இருப்போம். ஒருவரையொருவர் மதிப்போம். எங்கள் மகன் மற்றும் இரு குடும்பங்களின் நலன் கருதி எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VishnuVishal #RajiniNatraj #Divorce