என் மலர்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்"
- இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
- இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (25-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெற்று அரை இறுதி வாய்ப்பை பெறப்போவது ஆஸ்திரேலியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஷ் , மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 315 ரன்களை குவித்து 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரியான் ரிக் கெல்டன், கேப்டன் பவுமா, மர்க்கிராம், வான்டர் டூசன் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபடா, நிகிடி, வியான் முல்டர் பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்களும்,
டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவிக்கவும் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் லின் டக்அவுட்டிலும், ஆரோன் பிஞ்ச் 11 ரன்னிலும் வெளியேறினார்கள்.
அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் சிறப்பாக விளையாடி 102 பந்தில் 106 ரன்கள் சேர்த்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 63 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும், மேக்ஸ்வெல் 35 ரன்னிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்கிராம் 32 ரன்னில் வெளியேறினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 15.3 ஓவரில் 55 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்து திணறியது.

4-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த டு பிளிசிஸ் 114 பந்தில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

டேவிட் மில்லர் 108 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 139 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 321 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை உயிரோட்டமாக வைத்திருக்க முடியும் என்பதால் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் (41), கிறிஸ் லின் (44), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (47) ஆகியோரின் சராசரி ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 48.3 ஓவரில் 231 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா நான்கு விக்கெட்டுக்களும், பிரிடோரியஸ் 3 விக்கெட்டுக்களும், டேல் ஸ்டெயின் இ ரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிக் 9 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 16 ரன்னிலும் வெளியேறினார்கள். 3-வது வீரராக களம் இறங்கிய மார்கிராம் 19 ரன்னில் ரன்அவுட் ஆனார்.
ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 68 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் டு பிளிசிஸ் உடன் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணியின் ஸ்கோர் 142 ரன்னாக இருக்கும்போது டு பிளிசிஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். அடுத்து வந்த கிளாசன் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
டேவிட் மில்லர் கடைசி நிலை பேட்ஸ்மேன்களை வைத்து வெற்றிக்காக போராடினார். ஆனால் 51 ரன்கள் எடுத்த நிலையில் 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மில்லர் ஆட்டமிழக்கும்போது தென்ஆப்பிரிக்கா 187 ரன்கள் எடுத்திருந்தது. 45 ரன்கள் தேவைப்பட்டது.

ரபாடா 9 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு லுங்கி நிகிடி உடன் இம்ரான் தாஹிர் ஜோடி சேர்ந்தார். இவர் இணையும்போது 17 பந்தில் 29 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிகிடி 19 ரன்னுடனும், இம்ரான் தாஹிர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுக்களும், ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியது ஆஸ்திரேலியா. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி நாளைமறுநாள் (11-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் ஒரேயொரு டி20 போட்டி 17-ந்தேதி நடக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 11-ந்தேதியும் நடக்கிறது. அதன்பிடி டி20 கிரிக்கெட் நவம்பர் 17-ந்தேதி நடக்கிறது.
இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசிம் அம்லா ஏற்கனவே பங்கேற்கமாட்டார் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. தற்போது டுமினிக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. பெஹார்டியன் 3. குயின்டான் டி காக், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. கிளாசன், 7. மார்கிராம், 8. டேவிட் மில்லர், 9. கிறிஸ் மோரிஸ், 10. லுங்கி நிகிடி, 11. பெலுக்வாயோ, 12. பிரிடோரியஸ், 13. ரபாடா, 14. ஷம்சி, 15. ஸ்டெயின்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து அம்லா விலகியுள்ளார்.
அடுத்த வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதாலும், தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து விளையாட இருப்பதாலும், பாதுகாப்பு கருதி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.