என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வமித்ரா"

    வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி இரு வேடங்களில் நடிக்கும் திகில் படத்திற்கு `சின்ட்ரல்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Cinderella #RaaiLaxmi
    நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

    நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகள் பலரும் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து நடித்து திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் நடித்த படங்கள் வசூல் சாதனைகளும் நிகழ்த்தி உள்ளன. 

    இதனால் கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகளை இயக்குநர்கள் உருவாக்கி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது ராய் லட்சுமியும் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த வினோ வெங்கடேஷ் இயக்கும் திகில் படத்தில் ராய் லட்சுமிக்கு முன்னணி கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. திகில் படமாக உருவாகும் இந்த படத்திற்கு சின்ட்ரல்லா என்று தலைப்பு வைத்துள்ளனர். 

    படம் பற்றி இயக்குநர் கூறும்போது, 

    ‘‘சின்ட்ரெல்லா திகில் கதையம்சம் உள்ள படம். ராய் லட்சுமி பேயாகவும், இசைக்கலைஞராகவும் இருவேடங்களில் வருகிறார். ஏற்கனவே 8 கதைகளை கேட்டு அவற்றில் நடிக்கும் யோசனையில் இருந்த ராய் லட்சுமிடம் சின்ட்ரல்லா கதையை சொன்னதுமே மற்ற படங்களை தவிர்த்து விட்டு இதில் நடிக்க வந்துவிட்டார். 

    அவரது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படமாக இருக்கும். படத்தின் ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பிடித்த வி‌ஷயங்களும், இன்னொரு பகுதி பயமுறுத்துவதாகவும் இருக்கும். பேய் வேடத்துக்கு ராய் லட்சுமி 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வமித்ரா இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம் என்றார். #Cinderella #RaaiLaxmi

    ×