என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமியை தாயாக்கிய வாலிபர்"

    கள்ளக்குறிச்சியில் ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை தாயாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள பானையங்கால் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கும் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து (28) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது.

    அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியுடன் பச்சமுத்து பலமுறை உல்லாசமாக இருந்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமிக்கு நேற்று கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

    இதுப்பற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    இதனை அறிந்த பச்சமுத்து தலைமறைவாகி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பச்சமுத்து மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×