என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 156006
நீங்கள் தேடியது "ராம்தாஸ்"
ராம்குமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `ராட்சசன்' படத்தில் கிறிஸ்டோபர் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளவரை படக்குழு நேற்று அறிமுகப்படுத்தியது. #Ratsasan #VishnuVishal
முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் `ராட்சசன்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் வில்லனாக, சைக்கோ கொலைகாரனாக நடித்திருந்தவர் சரவணன் என்பவரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
சரவணன் என்பவர் தான் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் என்ற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் விமர்சனம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. எப்படியாவது இந்த ஆண்டு திருவிழாவை நடத்தியாக வேண்டும் என்று ஊர்த்தலைவரான ராஜ்கிரன் முடிவு செய்கிறார்.
7 வருட பகையை தீர்த்துக் கொள்ள விரும்பும் வரலட்சுமியின் குடும்பம், ராஜ்கிரன் பாதுகாப்பில் வளரும் ஜானி ஹரியை திருவிழாவில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறது. இந்த நிலையில் 7 வருடமாக ஊரில் இல்லாத நாயகன் விஷால் ஊர் திருவிழாவுக்காக கம்பம் வருகிறார். அங்கு போலீசாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் கீர்த்தி சுரேஷுக்கும், விஷாலுக்கும் காதல் வருகிறது.
கடைசியில், திருவிழாவில் நல்ல படியாக நடந்ததா? வரலட்சுமியின் குடும்ப பகை தீர்ந்ததா? விஷால் - கீர்த்தி சுரேஷ் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷால் தனது வழக்கமான அதிரடியுடன் பஞ்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரிய ஸ்டைலில் பட்டையை கிளப்புகிறார். காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் வந்து பாராட்டை பெறுகிறார். படத்தின் ஓட்டத்திற்கு, படத்தின் தூணாக நிற்கிறார் ராஜ்கிரன். அவரது கதாபாத்திரமே படத்திற்கு பெரிய பலம். சூரி, முனிஸ்காந்த், கஞ்சா கருப்பு காமெடிக்கு துணை நிற்கின்றனர். மற்றபடி அர்ஜய், ஹரிஷ் பேரடி, அப்பானி சரத், சண்முக ராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வந்த் என மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்துக்கு பெரிதும் உதவுகின்றனர்.
சண்டக்கோழி இரண்டாவது பாகத்தையும் பழிவாங்கல் கதையை மையப்படுத்தியே உருவாக்கி இருக்கிறார் லிங்குசாமி. இருப்பினும் முதல் பாகத்தை போலவே இதிலும் குடும்பம், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் தனது பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம். பாடல்களும் கேட்கும் ரகமாகவே உள்ளது. கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக நகர்கிறது.
மொத்தத்தில் `சண்டக்கோழி 2' சீற்றம். #Sandakozhi2Review #Vishal #Varalakshmi
Sandakozhi 2 Review Sandakozhi 2 Lingusamy Vishal Keerthy Suresh Varalakshmi SarathKumar Rajkiran Soori Appani Sarath Ramdoss Ganja Karuppu Hareesh Peradi Munish Kanth Vishwanth Shanmuga Rajan Thennavan Duraisamy சண்டக்கோழி 2 சண்டக்கோழி 2 விமர்சனம் லிங்குசாமி விஷால் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சரத்குமார் விஷால் பிலிம் பாக்டரி ராஜ்கிரன் சூரி அப்பானி சரத் கஞ்சா கருப்பு ராம்தாஸ் ஹரீஷ் பேரடி முனீஸ்காந்த் விஸ்வாந்த் சண்முகராஜன் தென்னவன் துரைசாமி
ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குநரை பாராட்ட சென்றேன், ஆனால் அவரோ பதறி அங்கிருந்து சென்றுவிட்டதாக அமலாபால் கூறினார். #Ratsasan #AmalaPaul
ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் நடிகை அமலாபால் பேசியதாவது,
படம் ரிலீசாகும் போது கடுமையான போட்டி இருந்தது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ராட்சசன் படத்தில் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ராம் ஒரு எளிஜிபில் பேச்சிலர். யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு கல்யாணம் பண்ணியிருந்தால் நடந்திருக்கும் என்று ராமிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். இந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் கொஞ்சம் டென்சன் ஆயிருவாங்க, இந்த படத்தின் படப்பிடிப்பில் அனைவருமே கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு முடிந்த உடனே ராமுக்கு நன்றி தெரிவித்து அவரை அரவணைத்து பாராட்ட சென்றேன். ஆனால் அவரோ பதறியடித்து ஓடியேவிட்டார். ரொம்ப சிறந்த மனிதர்.
நிறைய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமான விஷ்ணுவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் இந்த படத்தில் நடித்திருக்க முடியாது.
மீடூ பற்றி முதலில் ட்வீட் செய்தது நான் தான். எல்லாருக்கும் தெரியும், இந்த ஆண்டு பிப்ரவரியில் எனக்கு ஒரு பாலியல் தொல்லை வந்தபோதே நான் சொல்லியிருந்தேன். எனக்கு ஒரு தொல்லை வரும் போது அது பற்றி நான் பேசிவிட்டேன். இது மூடிவைக்கக்கூடிய விஷயம் அல்ல, இந்த மாதிரியான தொல்லைகள் நிறைய இருக்கிறது. சினிமாவில் மட்டும் இல்லை, மற்ற பல துறைகளிலும் இருக்கிறது. #Ratsasan #AmalaPaul
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் கைப்பற்றியிருக்கிறார். #Ratsasan #VishnuVishal
முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ராட்சசன் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே உட்கார வைக்கும் சைக்கோ த்ரில்லர் கதையான இந்த படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்திற்கான இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் வாங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Hi all..the news is true ..i was so confident of #Ratsasan that i got the HINDI remake rights of my film even before release :) thnx to my producer @Dili_AFF@dinesh_WM n @tridentartsoffl Ravi sir :) 🙏 thnk u to d person on twit who did this drawing for d mov :) pic.twitter.com/NKcuEW2SLk
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) October 11, 2018
இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபாலும், முக்கிய கதாபாத்திரத்தில் சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் பிலிம் ஃபாக்ட்ரி மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். #Ratsasan #VishnuVishal
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ராட்சசன் படத்தின் விமர்சனம். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு விஷால், இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு முயற்சி செய்து வருகிறார். சைக்கோ த்ரில்லர் கதையொன்றை இயக்க நினைத்து அதற்கான கதை தேடலில் ஈடுபட்டிருக்கும் விஷ்ணு விஷால், தனது கதைக்காக பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார். பின்னர் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை கூறி வருகிறார். ஆனால் இவரது முயற்சி அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஷ்ணுவின் மாமாவான ராமதாஸ், விஷ்ணு விஷாலை போலீஸ் வேலையில் சேர சொல்லி வற்புறுத்துகிறார். ராமதாஸின் உதவியுடன் போலீஸ் அதிகாரியாகும் விஷ்ணு விஷால் பதவியேற்ற 2 நாளில், பள்ளிச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து நடக்கும் கொடூர கொலைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும் அந்த கொலையில் இருக்கும் மர்மங்களை களைந்து பல தடங்களை சேகரிக்கிறார். இதற்கிடையே பள்ளி ஆசிரியையான அமலா பாலுக்கும், விஷ்ணு விஷாலுக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் அமலா பால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறாள்.
ஒருவழியாக சை்ககோ கொலையாளியை நெருங்கும் விஷ்ணு விஷாலால், அந்த கொலைகாரனை பிடிக்க முடியவில்லை. மேலும் பணியில் இருந்தும் விஷ்ணு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
கடைசியில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூர கொலைகளை செய்யும் ராட்சசனை விஷ்ணு விஷால் கண்டுபிடித்தாரா? தனது அக்கா மகளை மீட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை விஷ்ணு விஷாலே ஆக்கிரமித்திருக்கிறார். படத்தை தனது தோள் மீது சுமந்து செல்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்காக விஷ்ணு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அமலாபாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் கவர்ந்து செல்கிறார்.
காமெடி தோற்றத்தில் நடித்து வந்த ராமதாஸ் இந்த முறை விறைப்பான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் வந்து செல்கிறார். காளி வெங்கட் ஆங்காங்கு வந்து செல்கிறார். ஒரு சில இடங்களிலேயே அவருக்கு சொல்லும்படியான காட்சிகள் இருக்கிறது. ராதாரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூசேன் ஜார்ஜ் அவரது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.
முண்டாசுப்பட்டி என்ற முழு நீள காமெடிப் படத்தை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படைப்பில் முழு த்ரில்லர் கதையை முயற்சித்திருக்கும் இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டுக்கள். படத்தின் முதல் பாதி போவதே தெரியாத வகையில் நகர்கிறது. இரண்டாவது பாதி அதற்கு நேர்மாறாக எப்போது முடியும் என்று யோசிக்க வைக்கிறது. இரண்டாவது பாதியில் காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வில்லனை நெருங்கிய பிறகும் காட்சி நீள்வது, ஒருவித சோர்வை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது.
படத்தில் சைக்கோ கொலையாளி பற்றி எந்த இடத்திலும் கொடூரமான முகத்தையோ, தோற்றத்தையோ காட்டவில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களை படம் முழுக்க அச்சுறுத்தியிருக்கிறார் ஜிப்ரான். பொம்மை இருக்கும் கிப்ட் பாக்ஸை காட்டும் போது வரும் பின்னணி இசையின் மூலமே ஒருவித பயத்தை உண்டுபண்ணியிருக்கிறார். வில்லன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை காட்டாவிட்டாலும், இசையாலேயே அந்த ராட்சசனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
மொத்தத்தில் `ராட்சசன்' ஆர்வத்தை தூண்டுகிறான். #RatsasanReview #VishnuVishal #AmalaPaul
ராம்குமார் இயக்கத்தில் ராட்சசன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், இயக்குநர் கதை சொல்வதை கேட்டு படத்தில் நடிக்க அமலாபால் மறுத்துவிட்டதாகவும், நான் தான் அவரை நடிக்க வைத்தேன் என்றும் விஷ்ணு விஷால் கூறினார். #Ratsasan
ராட்சசனாக களம் இறங்கி இருக்கும் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் இருந்து....
ராட்சசன் படம் ஒரு சைக்கோ இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சீட்டு நுனியிலேயே அமர்ந்து பார்க்கும் அளவுக்கு சஸ்பென்ஸ் இருந்துகொண்டே இருக்கும். படம் பார்ப்பவர்களை அச்சத்திலேயே வைத்திருக்கும். போலீசே பிடிக்காத ஒருவன் போலீஸ் வேலையில் சேர்ந்து ஒரு பெரிய வழக்கை துப்பு துலக்கும் வேடம். 2 போலீஸ் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு முழு படத்திலும் போலீசாக நடித்ததில்லை. விக்ராந்த், கருணா என்று என் நண்பர்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.
போலீஸ் அதிகாரியான அப்பாவிடம் ஆலோசனை பெற்றீர்களா?
கேட்டேன். அவரும் சில ஆலோசனைகள் சொன்னார். ஆனால் இந்த வேடம் போலீஸ் தான் லட்சியம் என்று வாழ்பவன் கிடையாது. எனவே பெரிய ஆலோசனைகள் தேவைப்படவில்லை.
அமலாபால்?
அழகான டீச்சராக வருகிறார். படத்தில் மிகச்சில கதாபாத்திரங்களே வருவதால் அனைவருமே நன்றாக நடிப்பவர்களாக வேண்டும் என்று தேர்ந்தெடுத்தோம். அமலாபால் படத்திற்குள் வந்ததே சுவாரசியமான விஷயம். இயக்குனர் ராம்குமார் ரொம்ப கூச்ச சுபாவம். அமலாவிடம் கதை சொல்லும்போதே கூச்சப்பட்டுக் கொண்டே சொன்னதால் அமலாவுக்கு படத்தின் மீது சந்தேகம் இருந்தது. மறுத்துவிட்டார். பின்னர் நானே அமலாவிடம் கதை சொல்லி சம்மதிக்க வைத்தேன். அமலா மட்டுமல்ல முனீஸ் காந்த், காளி வெங்கட் என அனைவருமே நீங்கள் இதுவரை பார்த்தது போல் அல்லாமல் புதிதாக தெரிவார்கள்.
ராட்சசன் யார்?
வில்லன் தான். அந்த வேடத்தை பற்றியோ, அந்த வேடத்தில் நடிப்பவர் பற்றியோ இப்போது எதுவும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரம்.
காமெடி படங்களிலும் நடிக்கிறீர்கள், ராட்சசன் போல சீரியஸ் படங்களிலும் நடிக்கிறீர்களே?
எனக்கு கதை தான் முக்கியம். முண்டாசுப்பட்டி காமெடி படமாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல கதை இருந்தது. இன்று நேற்று நாளை, நீர்ப்பறவை என நான் நடித்த படங்கள் எல்லாமே அப்படித்தான். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு பிறகு மாவீரன் கிட்டு. இப்போது கதாநாயகனுக்கு பிறகு ராட்சசன். அடுத்து ஜெகஜ்ஜால கில்லாடி பக்கா காமெடி படம். அதற்கு அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் காடன். எல்லாவற்றிலுமே கதை தான் முக்கியம். காமெடி படங்களை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என்றால் நடிப்பதில் விருப்பம் அதிகம். #Ratsasan #VishnuVishal #AmalaPaul
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Ratsasan #VishnuVishal
விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ராட்சசன். முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு ராம்குமார் - விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்திருக்கும் இந்த படம் ஒரு சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கிறது.
நேற்று வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரிலிருந்து சைக்கோ கொலைகாரன் ஒருவனை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். விஷ்ணு ஜோடியாக அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சூசேன் ஜார்ஜ், சஞ்சய், காளி வெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சிங்கிள் ஒன்று ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thnx for d tremendous response for #RatsasanTrailer, Here's the next thing #RatsasanAudioFromSep25
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) September 21, 2018
Stay Tuned for @GhibranOfficial ‘s musical🎹@vishnuuvishal@Amala_ams@dir_ramkumar@saregamaglobal@axessfilm@tridentartsoffl@dili_Aff@axessdinesh@SoundharyaRavi1pic.twitter.com/m0QpE9j91j
படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநோளில் தான் விஜய் சேதுபதியின் 96 படமும், விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Ratsasan #VishnuVishal
ராட்சசன் டிரைலரை பார்க்க:
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X