search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்அவுட்"

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டி'ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் சந்தித்தார். அப்போது பிஞ்ச் அடித்த பந்து நேராக பந்து வீச்சாளரை நோக்கி வந்தது. இமாத் வாசிம் பந்தை தனது கையால் தடுத்தார். பந்து கை விரலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது டி'ஆர்கி ஷார்ட் பேட் க்ரீஸ்க்குள் இருந்தாலும் கிரவுண்டில் உரசியதாக தெரியவில்லை.



    இதனால் 3-வது நடுவர் முடிவிற்கு விடப்பட்டது. அப்போது பலமுறை ரீப்ளே செய்து பார்த்த போதிலும், ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுதான் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    போட்டியின் பிற்பகுதியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நடுவர் தெரியாமல் ரெட் பட்டனை அழுத்தியிருக்கலாம் என தங்களை ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
    ×