search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்ப்பனகை"

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தசரா விழாவை முன்னிட்டு மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடினர். #Dussehra #Maharashtra
    மும்பை:

    தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். #Dussehra #Maharashtra
    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் காஜல் அகர்வால், அடுத்ததாக சரித்திர, புராண படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #KajalAgarwal
    சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவந்த பத்மாவத் படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்து ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை மணிகர்னிகா என்ற பெயரில் தயாராகிறது.

    இந்தியில் மகாபாரதம் கதையை படமாக்கும் வேலைகள் நடக்கின்றன. இதுபோல் ராமாயணமும் சினிமா படமாகிறது. இதை அனிமேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற பார்கவ் டைரக்டு செய்கிறார். மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை எடுக்கின்றனர்.

    பார்கவ் கூறும்போது, “ராமாயண கதையை ஏற்கனவே நிறைய பேர் படமாக்கி உள்ளனர். நான் அதில் வரும் ராவணன் சகோதரி சூர்ப்பனகை அத்தியாயத்தை மட்டும் பிரதானமாக வைத்து புதிய படத்தை எடுக்கிறேன். இளவரசியாக வாழ்ந்த சூர்ப்பனகையின் வாழ்க்கை, ராமன் மீதான ஆசை, இதனால் சீதை கடத்தப்பட்ட சம்பவம், ராமன்-ராவண யுத்தம் போன்றவை படத்தில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சூர்ப்பனகை கதாபாத்திரம் அழகாக காட்டப்படும்” என்றார்.

    இந்த படத்தில் சூர்ப்பனகை வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. காஜல் அகர்வாலை சந்தித்து கதை சொல்லி உள்ளனர். அவருக்கும் கதை பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்டோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



    காஜல் அகர்வாலுக்கு இன்னும் அதுபோல் கதைகள் அமையவில்லை. சூர்ப்பனகையாக நடிக்க அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வால் தற்போது ‘குயின்’ இந்தி படத்தின் தமிழ் பதிப்பான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.
    ×