search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷிராகுப்பி"

    கர்நாடகா மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை மக்கள் பயன்படுத்துவதால் 50 சதவீத மின் கட்டணம் மிச்சப்படுத்தப்படுகிறது. #Solarpower
    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் ஷிராகுப்பி என்ற கிராமம் உள்ளது. ஹூப்ளியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மின்வெட்டு குறித்து எந்தவித கவலையும் படமாட்டார்கள்.

    ஏனென்றால் இந்த கிராமம் முழுக்க சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 4980 பேர் வசிக்கும் ஷிராகுப்பி கிராமத்தில் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என 996 கட்டிடங்கள் உள்ளன.

    இந்த கட்டிடங்கள் அனைத்திலும் சூரியமின்தகடு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூரியஒளி மின்சாரம் மூலம் அந்த கிராமத்தில் 50 சதவீத மின் கட்டணம் மிச்சப்படுத்தப்படுகிறது.

    இது குறித்து அந்த கிராம பஞ்சாயத்தின் மேம்பாட்டு அதிகாரி ரேணுகா கூறியதாவது:-

    பிப்ரவரி மாதம் இந்த கிராமத்தில் சூரியஒளி மின் தகடு அமைக்கும் பணி தொடங்கியது. மே மாதத்துடன் இந்த பணிகள் நிறைவடைந்தன. இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் சூரிய தகடு அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டு எலெக்ட்ரிக் பல்ப், மொபைல் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்ப் 15 ஆம்பியரும், மற்றொரு பல்பு 5 ஆம்பியரையும் கொண்டது. இந்த பல்புகள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் வரை எரியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த கிராமத்தில் இருந்து ஹூப்ளியில் உள்ள மாநில அரசின் மின்சார வினியோக நிறுவனத்துக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. #Solarpower
    ×