என் மலர்
நீங்கள் தேடியது "ஜனனி"
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
- தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'வடக்கன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகின்றனர். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.
சமீபத்தில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'வடக்கன்' திரைப்படம் வருகிற மே 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார்.
- இந்த படத்திற்கு கோவிந்த் நல்லதம்பி படத்தொகுப்பு செய்கிறார்.
விதார்த் மற்றும் ஜனனி இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றி பெற்ற படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வந்த குவியம் ஸ்டுடியோஸ் நிறுவனம், தற்போது குவியம் பிலிம்ஸ் என்ற பெயரில் பட தயாரிப்பில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் குவியம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் லால்குடி எம்.ஹரிஹரன் தயாரிக்கும் முதல் படத்தில் விதார்த் மற்றும் ஜனனி நடிக்கின்றனர். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், பப்லு பிரித்விராஜ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஷாரிக் ஹாசன், விகாஸ், மகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் எழுத லால்குடி எம்.ஹரிஹரன் இசையமைக்கிறார். கோவிந்த் நல்லதம்பி படத்தொகுப்பு செய்யும் இப்படத்திற்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி கிருஷ்ணா குமார் இயக்குகிறார்.
இப்படம் குறித்து கிருஷ்ணா குமார் கூறும்போது, நாம் செய்த தவறு எந்த காலத்திலும் நம்மை விடாது. எதாவது ஒரு வழியில் நம்மை வந்து சேரும் என்ற கதையை, ஹைபர் லிங்க் நான் லீனியர் பாணியில் திரைக்கதை அமைத்து இருக்கிறேன். இதுவரை யாரும் சொல்லாத வகையில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்ய இருக்கிறோம்.
சஸ்பென்ஸ் திரில்லர், டிராமா, காதல் ஆகிய மூன்று கதைகளாக திரைக்கதை நகர்ந்து ஒரே புள்ளியில் கதை முடியும். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி 35 நாட்கள் தொடர்ந்து நடத்த இருக்கிறோம் என்றார்.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் போடப்பட்டது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
- விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
அருண் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அறிவான். துரை மகாதேவன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆனந்த்நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் அருண் பிரசாத் கூறுகையில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். அங்கு அடுத்தடுத்து 4 கொலைகள் நடக்கிறது. கொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்? காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
துப்பறியும் திரில்லருடன் புதுமையான கதை களத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலியில் 65 நாட்கள் நடந்தது. கார்த்திக் ராம் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

