என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 161374
நீங்கள் தேடியது "ஓ.பி.ராவத்"
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், பிறரின் அழுத்தங்கள் அல்ல என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் திட்டவட்டமாக கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
புதுடெல்லி :
திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.
மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.
இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-
யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்தார். #5StateElection #CECOPRawat
புதுடெல்லி :
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15-ம் தேதியும் நிறைவடைகிறது. இதனால், இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
மேலும், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது.
இதனிடையே, நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் 5 மாநிலத்திற்கும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் அறிவித்தார். இந்த தேர்தலின் போது யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்காளர்கள் பார்க்கும் ஒப்புகை சீட்டு வாக்கு எந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மத்தியப்பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
மேலும், 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் சிமோகா, பெல்லாரி மற்றும் மாண்டியா மக்களவை தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. #5StateElection #CECOPRawat
×

X