என் மலர்
நீங்கள் தேடியது "தான்சானியா"
- வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
- புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது.
டோடோமா:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் முடிய உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் சீர்திருத்தத்துக்கு அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் புதிய விதிமுறைகளை ஏற்க மறுக்கும் கட்சி இனிவரும் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால் பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் தலைவர் டுண்டு லிசு அதில் கையெழுத்திடவில்லை. பின்னர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் கலந்து கொள்ள சடேமா கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் 2030-ம் ஆண்டு வரை நடைபெறும் எந்தவொரு இடைத்தேர்தலிலும் அக்கட்சி போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைய இயக்குனர் ராமதானி கைலிமா அறிவித்துள்ளார்.
- மழை பெய்து கொண்டிருந்தபோது விமானம் ஏரிக்குள் விழுந்து மூழ்கியது.
- 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்
டார் எஸ் சலாம்
தான் சானியாவில் நாட்டில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.
புகோபாவை விமானம் நெருங்கிய நிலையில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது மழை பெய்துக் கொண்டிருந்ததால் விமானம் தண்ணீருக்குள் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என தான் சானியா பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார். விமானம் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்த போது, மோசமான வானிலையால் விபத்தை சந்தித்தது என்று போலீஸ் கமாண்டர் வில்லியம் மவாம்பகலே தெரிவித்தார்.
- 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
- 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.
இன்றைய காலத்தில் ஒரு மனைவி, 2 குழந்தைகளை நிர்வகிப்பதே ஆண்களுக்கு பெரிய பொறுப்பாக இருக்கிறது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே குடும்பத் தலைவருக்கு சவாலாகப் போய்விடுகிறது. பலர் பொறுப்புகளை சுமக்க முடியாமல் திணறிப் போகிறார்கள்.
ஆனால் ஒருவர் 20 மனைவிகள் கட்டி, தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. யார் அந்த மகராசன் என்று கேட்கத் தோன்றுகிறதா. அந்த அதிசய மனிதரின் பெயரும் அவரது குடும்பத்தைப் போலவே நீண்டது.
எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த அவர், 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.

அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் தலைவராக உயர்ந்தார். தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். மற்ற 4 மனைவிகள் இறந்து போனார்கள். இப்போது அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கிறார்கள். மேலும் 144 பேரன் பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். அவரது ஒரு குடும்பமே தனி கிராமம்போல மிகப்பெரியது. கபிங்கா அதன் ராஜாவாக கம்பீரமாக வலம் வருகிறார்.
கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்ததாக அவர்களது மனைவிமார்கள் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது. தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சகோதரிகள் போல சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விவசாயம் அவர்களது தொழிலாக உள்ளது. உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கபிங்காவின் குடும்பம்...
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும்.
தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்ரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17-ம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்ரிகாவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது. தான்சானியாவில் பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி முதலிடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், முகமது டியூஜி மர்மநபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும், முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்தல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தார் இ ஸலாம் கவர்னர் கூறுகையில், ‘சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர், அவர்கள் வெள்ளையர்கள் என தெரியவந்துந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.
இது தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜி கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என அவர் தெரிவித்தார். #MohammedDewji
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும்.
தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 100 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, ஏரியில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்கப்பட்டவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே 136 பேர் உயிரிழப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உத்தரவிட்டுள்ளார். மேலும், இன்று முதல் நான்கு நாட்கள் தேசிய துக்கதினமாக அனுசரிக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #LakeVictoriaFerryAccident
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும்.
தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 79 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. எனினும், 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #LakeVictoriaFerryAccident