என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூபாய் மதிப்பு"

    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக உள்ளது. #RupeeAt74
    புதுடெல்லி:

    கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

    மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வகையில் ரூ.74.10 ஆக சரிந்தது. ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சென்செக்ஸ் 792 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. 
    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.2.72 லட்சம் கோடியை இழந்துள்ளனர். #Sensex #ShareMarket #Rupee
    மும்பை:

    சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாட்டு நாணையங்கள் சரிவினை சந்தித்து வருகின்றன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. 

    சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின் சற்று தேக்க நிலை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 295 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 37,290 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 98.85 புள்ளிகள் சரிந்து 11,278 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் டாலர் மதிப்பு உயர்வால், முதலீட்டு நிறுவனங்கள் பலவும் லாபத்தைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் தங்கள் பங்குகளை விற்பனை செய்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகஅளவில் சரிவைச் சந்தித்தது. 
    இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #RupeeAllTimeLow
    புதுடெல்லி:

    இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 57 காசுகளாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத இந்த வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும், பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. இறக்குமதி நடவடிக்கைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே நிலை நீடித்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தவிர, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் இது பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்று மதியை விட இறக்குமதி அதிகரித்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    தவறான பொருளாதார கொள்கை, வர்த்தக நடவடிக்கைகள் காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கருத்துக்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளும் இந்த காரணத்தை கூறி மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

    இது குறித்து மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    சர்வதேச நாடுகள் இடையே வர்த்தகத்தில் கடும் போட்டி உள்ளது. இது ஒரு காரணம். இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதும் மிக முக்கிய காரணமாகும்.

    இந்தியாவின் எரிபொருள் தேவையில் 81 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைக்கு ஏற்ப எண்ணையை அந்த நாடுகள் உற்பத்தி செய்வதில்லை.

    இந்த காரணங்கள் அனைத்தும் உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதன் அடிப்படையிலேயே, இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. விரைவிலேயே ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையை எட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RupeeAllTimeLow
    ×