search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரபாகர்"

    எங் மங் சங் என்ற படத்திற்காக நடிகர் பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் நேருக்கு நேர் மோதியிருக்கிறார். #PrabhuDeva #YungMungSung
    வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்".

    இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.



    படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டது. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக எங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பாகுபலி பட வில்லன் பிரபாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Prabhudeva #PDinKhaki
    ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபாகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது. 

    இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 



    கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். அன்பறீவ் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார். டிக் டிக் டிக் படத்தை தயாரித்த ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

    ‘பிரபுதேவா போலீஸாக நடிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும், இந்த படம் பிரபுதேவாவின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாக அமையும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இயக்குநர் முகில். இவர் பிரபுதேவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #Prabhudeva #PDinKhaki

    காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழத்தின் பிரதிநிதியாக பிரபாகரன் நியமிக்கப்படுவார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #CauveryManagementAuthority
    சென்னை:

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


    மத்திய அரசு நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    காவிரி நீர் ஆணையத்தின் 9 உறுப்பினர்களில் 2 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும் 2 பேர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். மத்திய அரசு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய அரசுகள் சார்பில் தலா ஒருவர் வீதம் 5 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் ஒரு வாரத்துக்குள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆணையத்தில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆணைய உறுப்பினராக இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிலும் தமிழகம் ஒரு உறுப்பினரை நியமனம் செய்ய வேண்டியதுள்ளது. அந்த இடத்துக்கு தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே காவிரி ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கை நியமிக்க காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை யு.பி.சிங் சரிவர கடைபிடித்ததில்லை. அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

    என்றாலும் காவிரி நீர் ஆணைய அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது, தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக அரசு கூறி உள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இனி உரிய தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை டெல்டா பாசன பகுதி விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.


    இதற்கிடையே காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் கூட்ட முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

    அதன் பிறகு காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் கர்நாடகா, தமிழ்நாட்டில் உள்ள காவிரி அணைகளில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த மாத இறுதியில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த மாத இறுதியில் குறுவை சாகுபடி பயிரிடுவது தொடங்கப்பட உள்ளதால் ஜூன் 20 அல்லது 23-ந்தேதிகளில் தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ரங்கநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #CauveryWaterManagement #CauveryManagementAuthority
    ×