என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசிஐ தேர்வாளர்கள்"

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்தியா அணியில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்காததால் தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் சாடியுள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் நடக்க இருக்கிறத. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவானுக்கு இடம் அளிக்கப்படவில்லை. உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இடம் பெறாததற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்வுக்குழு மீது சாடியுள்ளார். ரோகித் சர்மா அணியில் இடம்பெறாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லை. உண்மையிலேயே தேர்வாளர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?. யாராவது எனக்கு தடயம் (Clue) கொடுக்க முடியாமா? தயது செய்து எனக்கு தெரிவியுங்கள், என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×