என் மலர்
நீங்கள் தேடியது "பிக் பாஸ்"
- நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர்.
- கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.
கன்னட பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான சந்தன் செட்டியும் அவரது மனைவி நிவேதிதா கௌடாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். கன்னட பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்ற சந்தன் செட்டிக்கும் நிவேதிதாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சாந்தன் செட்டி நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பன்முகத்தன்மையோடு கன்னட சினிமாவில் இயங்கி வருபவர்.

இந்நிலையில் நட்சத்திர ஜோடியான இவர்கள் பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து தாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியை நிவேதிதா தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் அறிவித்துள்ளார். அவரது பதிவில், இந்த நாள், நானும் சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு ஒருமனதாக எங்களது திருமணத்தை சட்டரீதியாக முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.
ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களது முடிவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையோடுதான் இருப்போம். உங்களின் ஆதரவு எங்களை இந்த இக்கட்டான காலகட்டத்தை கடக்க உதவி செய்யும். நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நாக சைதன்யா - சமந்தா, ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி என இந்த பாட்டியல் நீளும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒரு நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுப்பப்படுகிறது.
- ஒட்டுமொத்த உலகமே ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் இயல்பாக நடக்கிறதா அல்லது ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறதா என்ற கேள்வி, ஒவ்வொரு முறை புது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகும் போதும் போட்டியின் போதும் நிச்சயம் எழும். உலகின் பிரபல விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் WWE-வுக்கு அடுத்தப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த சந்தேகத்திற்கு தி கிரேட் காளி பதில் அளித்துள்ளார். பிக் பாஸ் மட்டுமின்றி WWE தொடர்பான கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். ஒட்டுமொத்த உலகமே ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது.
தற்போது திருமணங்களும் ஸ்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இதேபோன்று WWE போட்டி கூட ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட கிரேட் காளி வாரத்திற்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக பெற்றுக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின.
- தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறித்து தகவல்.
- நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் அவர் விலகுவதாக அறிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
"சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதைதொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
- இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.
பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.
இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.
இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது.
புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.
முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7 டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.
இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து 24 மணி நேரத்தில் எவிக்ட் ஆகி செல்வது சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

தொடர்பு வசதிகள் இல்லாத வீடு. பிரபலங்கள் சிலர் சில மாதங்கள் தங்க வேண்டும். அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். கண்காணிக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளில் சுவாரஸ்யம்(?) தருபவை மக்களுக்குக் காட்டப்படும். `பிக் பிரதர்' என்று சர்வதேச அளவிலும், `பிக் பாஸ்' என இந்தியாவிலும் ஒளிபரப்பாகிற இந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் கான்சப்ட் இது.
தமிழகத்துக்கு முதல் முறையாகக் கடந்த ஆண்டு வந்தது, இந்த நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2வது சீசன் தொடங்கப்பட்டு சென்ட்றாயன் வெளியேற்றம், ஐஸ்வர்யா எவிக்ஷனுக்கு வராதது, மகத் அட்டகாசம் என பல சர்ச்சைகளுக்கு இடையே இன்று நிறைவடைந்துள்ளது.

ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொடக்க போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இடைப்போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி.
ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் அனைத்து எவிக்சன்களையும் கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறினர். ஜனனிக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து விஜயலட்சுமியும் போட்டியில் இருந்து வெளியேற ஐஸ்வர்யாவும், ரித்விகாவும் இறுதி சுற்றில் மோதினார்கள்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார், ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ரித்விகாவுக்கு வெற்றிக்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
வாழ்த்துக்கள் ரித்விகா. #BiggBoss2 #Riythvika #KamalHaasan