என் மலர்
நீங்கள் தேடியது "லோக்பால்"
- மாதபி பூரி புச், எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆஜராக வேண்டும்.
- லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் புகார் தாரரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆகியோர் வருகிற ஜனவரி 8ம் தேதி நேரில் ஆஜராக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செபி தலைவர் மாதபி பூரி புச் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. மஹூவா மொய்த்ரா லோக்பால் அமைப்பில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு தொடர்பாக வருகிற 28ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் எம்.பி. மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும் என்று லோக்பால் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
- செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
இதனிடையே இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார் இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
இந்நிலையில், செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சமூக ஆர்வலரும், காந்திய வழி போராளியுமான அன்னா ஹசாரே முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியில் லோக்பால் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 12 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு நடத்தினார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த போராட்டத்திற்கு பணிந்து அப்போதைய காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. அடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்த பா.ஜ.க அரசு லோக்பால் நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தது.
ஆனால், லோக்பால் நீதிபதியை நியமனம் செய்வதில் மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிருப்த்தி தெரிவித்தது.
இந்நிலையில், லோக்பால் நீதிபதியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்னா ஹசாரே கூறுகையில், ’மத்திய அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதில் உரிய கவணம் செலுத்தவில்லை, லோக்பால் நீதிபதியை நியமிக்காமல் பல்வேறு காரணங்களை கூறி அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த ஊரான ரலேகன் சித்தி கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போகிறேன்.
ஊழல் இல்லாத இந்தியாவை விரும்பும் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்’ என அன்னா ஹசாரே தெரிவித்தார். #Lokpal #AnnaHazare