search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரா"

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பது பற்றி தெரியும் என கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும், முன்னாள் ராணுவ மந்திரியும், ராஜேபச்சே தம்பியுமான கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத்துறை அதிகாரி நமல் குமாரா தெரிவித்தார்.

    இந்த தகவலை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நலாகா டி. சில்வா தன்னிடம் இதுபற்றி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இவர் தன்னிடம் பேசிய ஆடியோ ஆவணத்தை சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் குமாரா ஒப்படைத்தார். அதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எம்.தாமஸ் என்ற இந்தியர் குமாரா வீட்டுக்கு சென்று இருந்தார்.

    இவர் இந்த சதி திட்டம் குறித்து தனக்கு தெரியும் என அவரிடம் கூறினார். அதையடுத்து தாமசை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நமல்குமாரா மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி நலாசா டி சில்வா பேசிய ஆடியோவின் உண்மை தன்மையை ஆராயுமாறு சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    கைது செய்யப்பட்ட இந்தியர் தாமஸ் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட நாளைவிட அதிக காலம் அங்கு சட்ட விரோதமாக தங்கியிருப்பதாகவும், குமாராவுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. #SrilankanPresident #MaithripalaSirisena
    ×