என் மலர்
நீங்கள் தேடியது "சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்"
பிரதமர் மோடியை மாவீரன் சிவாஜியுடன் ஒப்பிட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா சிவாஜி மகராஜ் எப்போதும் அரசியல் கலவரங்களில் ஈடுபட்டதில்லை என கூறினார். #Sivaji #Modi #Sivasena
மும்பை:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். அப்போது அவர் சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதற்கிடையே, மகாரஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியினர் யோகி ஆதித்யநாத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், சிவாஜி மகாராஜா எப்போது அரசியல் கலவரங்களில் எப்போதும் ஈடுபட்டதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ரபேல் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று மடங்கு விலையில் போர் விமானங்களை வாங்கியுள்ளது வெளியானது. இதற்கு நிச்சயம் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #Sivaji #Modi #Sivasena