என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை வற்புறுத்தல்"

    தேனி அருகே ராணுவத்தில் சேர தந்தை வற்புறுத்தியதால் வி‌ஷ மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி வீரபாண்டி போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 21). கடந்த சில வருடங்களாகவே தந்தை விக்னேஷ்குமாரை ராணுவத்தில் சேர வற்புறுத்தி வந்துள்ளார்.

    இருப்பினும் தனக்கு ராணுவத்தில் சேர விருப்பம் இல்லை என்று தந்தையிடம் பல முறை தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் தனது தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த விக்னேஷ்குமார் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்துக்கு வைக்கும் வி‌ஷ மாத்திரையை தின்று விட்டு பின்னர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த தந்தை கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×