என் மலர்
நீங்கள் தேடியது "புதுவை நகர பகுதி"
புதுவை நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை நகரத்தின் முக்கிய வணிக பகுதியான காந்தி வீதி,நேரு வீதி, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட டீ,காபி கடைகள் உள்ளன.
நகர பகுதியில் உள்ள இந்த கடைகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டீயின் விலை ரூ. 12-ம் காபியின் விலை ரூ. 20 என உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே டீ விலை ரூ. 10-க்கும் காபி ரூ. 15-க்கும் விற்கப்பட்டது. தற்பொழுது ரூ 2 உயர்த்தப்பட்டிருக்கிறது. விலைவாசி உயர்வு காரணமாகவே டீ,காபி விலையை 4 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தி இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் ஏழை, நடுத்தர மக்களின் உற்சாக பானமாக டீ ,காபி உள்ளதால் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை என்று அதனை அருந்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.